1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (16:57 IST)

புதுவையில் இன்று ஒரே நாளில் 1195 பேருக்கு கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
புதுவையில் இன்று ஒரே நாளில் 1195 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 654 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் 11 பேர் பலியாகியுள்ளதாகவும் புதுவையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 622 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் 48 ஆயிரத்து 298 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது 9 ஆயிரத்து 519 வேறு சிகிச்சைகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஏற்கனவே சனி ஞாயிறு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரசை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே