கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்
இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.
இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது :
சென்னை மாநகரத்தில் வரும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்