1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (16:53 IST)

நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை: சென்னை மாநகராட்சி மேயர் தகவல்

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்போர் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்