1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:23 IST)

இந்தியாவுக்கு என் சம்பளத்தில் ஒரு பகுதி! – உதவிக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பலரும் உதவி செய்து வரும் நிலையில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை தருவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு நாடுகளும், முக்கிய பிரமுகர்களும் இந்தியாவிற்கு உதவ நேச கரம் நீட்டியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களும் தங்கள் பங்குக்கு நிதியுதவியை வழங்கு வருகின்றனர்.

அந்த வகையில் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை இந்தியாவிற்கு தருவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் நிகோலஸ் பூரன் அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.