வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (07:41 IST)

சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள்.. விபரீத முடிவு எடுத்ததால் அதிர்ச்சி..!

சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள் எடுத்த விபரீத முடிவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்  கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள அருள் வினித் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு சின்ன தகராறு காரணமாக பேசாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் புவனேஸ்வரி அருள் வினித்தை செல்போனில்  தொடர்பு கொண்டு நீ என்னிடம் பேசவில்லை என்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி போனை கட் செய்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் வினித் உடனடியாக புவனேஸ்வரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் தொங்கி இறந்து விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் இதனை அடுத்து மனம் உடைந்த அவர் தனது தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒரு சின்ன பிரச்சனைக்காக பேசாமல் இருந்த காதலர்கள் இருவரும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva