வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (07:34 IST)

மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் தான் குரல் கொடுக்கவில்லையா.. பா ரஞ்சித் கேள்வி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நினைவேந்தல் பேரணி நடத்திய இயக்குனர் ரஞ்சித் நேற்று பேசியபோது, ‘நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல்வுடைவர்களாக மாறும் போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை மாறும்;

மேயர் பிரியா ராஜன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் எப்படி உயர் பதவிகளுக்கு வந்தார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பிரியாராஜன் திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை.
ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா ராஜன் மேயராகவும், கயல்விழி செல்வராஜ்  அமைச்சராகவும் வாய்ப்பு கிடைத்தது

மேயர் பிரியா ராஜன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இருவரும் ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு குரல் கொடுக்கவில்லை?. நீங்கள் திமுகவில்  இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா”

ஆம்ஸ்ட்ராங்கை ரவுடி என்று சமூக வலைதளங்களில் எழுதியவர்கள் அயோக்கியர்கள். அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நினைக்காதீர்கள். இது ஒரு எச்சரிக்கை. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று ஆவேசமாக பா ரஞ்சித் பேசினார்.

Edited by Siva