திருச்சியை சேர்ந்த துரைசாமி என்ற ரவுடி என்கவுன்ட்டர்.. புதுக்கோட்டை போலீசார் அதிரடி..!
திருச்சியை சேர்ந்த துரைசாமி என்ற ரவுடியை புதுக்கோட்டையில் போலீசார் என்கவுன்டர் செய்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகவும், அவரை கைது செய்ய முயற்சித்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ரவுடி துரைசாமி தாக்கியதில், காவலர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி எம்ஜிஆர் நகரில் துரை என்ற துரைசாமி என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை கைது செய்ததற்காக திருச்சி போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் தான் பதுங்கி இருந்த இடத்திலிருந்து ஆயுதங்களை கொண்டு போலீசாரை மிரட்டியதாகவும் அதுமட்டுமின்றி எஸ்ஐ மகாலிங்கம் என்பவரை ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து போலீசார் தற்காப்புக்காக ரவுடி துரையை நோக்கி சுட்ட நிலையில் துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காயமடைந்த எஸ்ஐ மகாலிங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran