ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 ஜூலை 2024 (14:25 IST)

வருசமெல்லாம் வசந்தம் பட இயக்குனர் ரவிஷங்கர் தற்கொலை!

தமிழ் சினிமாவில் வருசமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிஷங்கர். அந்த படம் நல்ல கவனம் பெற்ற போதும், அடுத்து அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இவர் இயக்குனர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சூர்யவம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர்தான் ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற சூப்பர் ஹிட் பாடலையும் எழுதினார். அதே போல அவர் இயக்கிய வருசமெல்லாம் வசந்தம் படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாளாக வாழ்ந்த அவர் நேற்றிரவு கே கே நகரில் வசித்து வந்த தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 62. அவரது மறைவு திரையுலகு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.