1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (08:11 IST)

பெட்ரோல் லாரி ஓட்டுநர்கள் வீட்டில் தீ விபத்து: 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் லாரி ஓட்டுநர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை மாவட்டம் சூலூர் அருகே  முத்துகவுண்டன்​புதூர் என்ற பகுதியில் பெட்ரோல் லாரி ஓட்டுநர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்னகருப்பு, தினேஷ், வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகியோர் தங்கியிருந்தனர்
 
டேங்கர் லாரி மோதி ஆசிரியை பலியான வழக்கில், போலீஸ் விசாரணைக்கு பின், சொந்த ஜாமினில் ஓட்டுநர் அழகுராஜா வெளிவந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ஓட்டுநர் அழகுராஜா, தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார் என தெரிகிறது.
 
அப்போது திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற அழகுராஜாவை நண்பர்கள் 6 பேரும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில்  3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva