வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:11 IST)

இன்று 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

school
புதுச்சேரியில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கதிர்காமம் என்ற பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை காண்பதற்காக தமிழகத்திலிருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான செடல் திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய நிகழ்வான செடல் திருவிழா நடைபெற உள்ளதால் இன்று புதுவையில் உள்ள 37 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
Edited by Siva