வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:17 IST)

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழ் நாட்டின் இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய சில இடங்களில் இன்று முதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் அடுத்த 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.