தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தமிழ்நாட்டில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலைவிய நிலையில், இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தப் பகுதியாக உள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் இதனால், இன்று தமிழ் நாட்டின் தென் பகுதிகளில், வட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
வரும் 5 மற்றும் 7 ஆம் தேதியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 8 ஆம் தேதி தமிழ் நாடு, காரைக்கால், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.