தொடர்புடைய செய்திகள்
- 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 93 கடன் செயலிகளை முடக்கிய மத்திய அரசு
- சீனாவுடன் தொடர்புடைய கடன், சூதாட்ட செயலிகளை முடக்கம்: இந்திய அரசு நடவடிக்கை
- கனமழை அலெர்ட்; இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?
- அனைத்து பேருந்துகளிலும் GPS கருவி: அமைச்சர் சிவசங்கர் தகவல்
- இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதானா?... பண்டிகை விடுமுறையைக் குறிவைக்கும் படக்குழு!
ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றும் போது மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை, மற்றும் பள்ளியில் உள்ள பதிவேடுகள் தற்போது கையால் எழுதி வரும் நிலையில் இனி அனைத்தும் கையால் எழுதுவதை தவிர்த்து கணினி மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த செயலி மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் கணினி மூலம் பதிவு செய்யப்படும் என்றும் அதேபோல் ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதற்கும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொண்டு விடுமுறைகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்த விடுமுறையை ஒப்புதல் அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
