வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 மே 2022 (14:50 IST)

ஜிப்மரில் இந்தி மொழி கட்டாயமா? நேரில் ஆய்வு செய்த ஆளுனர் தமிழிசை!

tamilisai
ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக செயல்படும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திமுகவில் உள்ள பல அரசியல் பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜிப்மரில் இந்தி மொழி கட்டாயத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இந்த ஆய்வை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது 
 
ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனருடன் ஆலோசனை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ‘ புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பதாக கருத்து நிலவி வருகிறது ஆனால் அதுவே நிர்வாக ரீதியிலான சுற்றறிக்கை என்றும் மொழி திணிப்பு அல்ல என்றும் அது மொழி திணிப்பு போல தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ஜிப்மரில் எந்த இடத்திலும் இந்தி திணிப்பு இல்லை என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்