வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:38 IST)

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழுக்கே முன்னுரிமை: நிர்வாகம் உறுதி

ஜிப்மர் மருத்துவமனையில் தமிழுக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்றும் ஹிந்தி அலுவல் மொழியாக மாற்றப்பட்டதாக வெளிவந்ததும் தகவல் தவறானது என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
ஜிப்மர் மருத்துவமனையில் ஹிந்தி மொழி மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் என சுற்றறிக்கை ஒன்று வெளியான தகவல் வெளியானது. இதனை அடுத்து தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பொங்கி எழுந்தனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனை அலுவலக பணிகளுக்கு இந்தி கட்டாயம் பயன்படுத்து வேண்ட்ம் என்று வலியுறுத்தப்படவில்லை என்றும் மருத்துவர் ஜிப்மருக்கு வரும் நோயாளிகள், பிற உறுப்பினர்களுடனான மொழி பரிமாற்றங்கள் அனைத்துக்கும் தமிழுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜிப்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது