பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் விவகாரம்: சிறை அதிகாரி சஸ்பெண்ட்!
பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அவரது மனைவியிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பப்ஜி மதன் மனைவியுடன் மூன்று லட்ச ரூபாய் சிறை அதிகாரி செல்வம் என்பவர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் என்பவரை சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் அவர்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது