திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (12:52 IST)

பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள்; லஞ்சம் கேட்ட அதிகாரி? – ஆடியோவால் பரபரப்பு!

யூட்யூபரான பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவருக்கு வசதிகள் செய்து தர லஞ்சம் கேட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூட்யூபரான பப்ஜி மதன் பெண்களை இழிவாக பேசியது மற்றும் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பப்ஜி மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பப்ஜி மதனுக்கு சிறையில் ஆடம்பர வசதிகள் செய்து தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றும் சிறை அதிகாரி பப்ஜி மதனின் மனைவியிடம் பேசுவதாக வெளியாகியுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் கை மாறியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.