செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:38 IST)

நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்

நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் நேர்காணல் செய்தவர் தான் இன்று எனது தொகுதியின் கவுன்சிலர் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 வயதே ஆன கார்த்திக் என்ற இளைஞரை திமுக ஐடிவிங்கிறாக  நேர்காணல் செய்தேன் 
 
அப்போது அவரை தேர்வு செய்தபோது முதல் முறையாக சந்தித்தேன். இன்று அவர் என் தொகுதியில் 76 வது வார்டு மாநகராட்சி கவுன்சில் ஆகியுள்ளார். திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுப்பது அரசியலிலும் நிறுவனத்திற்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது