புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (16:30 IST)

10 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த ஓட்டு 46 மட்டுமே!

10 வார்டுகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற மொத்த ஓட்டுக்கள் 46 என வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது என்பதும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்தார் என்பதும் தெரிந்ததே
 
 இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் என்ற பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் ஒற்றை எண்ணிக்கையில் தான் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்
 
இந்த தொகுதியில் உள்ள 10 வார்டுகளிலும் சேர்த்து நாம் தமிழர் கட்சியினர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 46 என்பது அந்தக் கட்சியினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.