புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (17:35 IST)

ஓபிஎஸ் கோட்டையில் வெற்றிகொடி நாட்டிய திமுக !

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மட்டும்  நேற்று  தேர்தல் நடந் நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில், ஆளுங்கட்சியாக திமுகவினர் அதிகப்படியாக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இ ந் நிலையில், அதிமுக செல்வாக்குமிக்க தேனி மாவட்டத்தில் உள்ள 5 மா நரகட்சிகளில் கம்பம், கூடலூர், போடி ஆகியவற்றை திமுக கைப்பற்றியுளது.

குறிப்பாக தேனி மாவட்டத்திலுள்ள அல்லி நகரம், பெரியகுளம் சின்னமனூர்,  நகராட்சிகளில் திமுகவினர் முன்னிலையிலுள்ளானர்.

மேலும், 22 பேரூராட்சிகளில் சுமார் 19 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
தற்போது நிலவரப்படி புதுப்பட்டி, வடுகப்பட்டி, பேரூராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனத் தகவல் வெளியாகிறது.