பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம்
விருதுநகரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் வெயிலு முத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் முகத்தில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் வெயிலு முத்து தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் வெள்ளை துணி கட்டி அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் நகர துணை தலைவர் பாலகிருஷ்ணசாமி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.