1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மே 2022 (15:55 IST)

தீர்ப்பை ஏற்கிறோம்.. ஆனா கொண்டாட தேவையில்லை! – பேரறிவாளன் விடுதலை குறித்து அண்ணாமலை!

பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய பாஜக அண்ணாமலை தீர்ப்பை ஏற்றாலும், இது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வில்லை என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை நேற்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் சிறையில் கழித்து விடுதலையான பேரறிவாளனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவர் “பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள்தான். சிறையில் இருந்து வெளிவந்தவரை கொண்டாடுவது தவறான முன்னுதாரணத்தை எடுத்து வைக்கிறது. பேரறிவாளன் நிரபராதி என விடுவிக்கப்பட்டது போல முதல்வர், அமைச்சர்கள் நடந்து கொள்வது அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துதான் பதவியேற்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் அவருடைய விடுதலை கொண்டாட வேண்டிய நிகழ்வல்ல. காங்கிரஸுக்கு ஆளுமை இருந்தால் திமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறட்டும்” என்று பேசியுள்ளார்.