1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. priest bail plea rejected by court

கோவில் பூசாரி ஜாமின் மனு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி..!

கோவில் பூசாரி
சென்னை கோயில் பூசாரி இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடுக்க பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருடைய ஜாமின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
 
சென்னை சேர்ந்த பூசாரி கார்த்திக் முனுசாமி என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில் தனக்கு ஜாமின் வழங்க கோரி கார்த்திக் முனுசாமிக்கு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுவார் என்றும் ஏற்கனவே அவர் 25க்கும் மேற்பட்ட இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கார்த்திக் முனுசாமி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!