வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2024 (08:41 IST)

ராகுல் காந்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்.. ஜாமின் கிடைக்குமா? சிறையா?

rahul gandhi
ராகுல் காந்தி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறைக்கு தள்ளப்படுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் கடந்த 2019 தேர்தல் அளவுக்கு படுதோல்வி இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்பதும் அக்கட்சி நாடு முழுவதும் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த நிலையில் பாஜக குறித்தும் பாஜகவின் கொள்கைகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பெங்களூரு நீதிமன்றத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவக்குமார், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய மூவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

பாஜகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக இந்த வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தை காரணம் காட்டி ராகுல் காந்தி ஆஜராகவில்லை என்பதை அடுத்து அவர் ஜூன் ஏழாம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று ராகுல் காந்தி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறைக்கு தள்ளப்படுவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva