1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices Witness Significant Drop in India

ஏறிய வேகத்தில் இறங்கி வரும் தங்கம்.. மீண்டும் 1 லட்சத்திற்குள் வருமா?

gold
இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 24 கேரட் சுத்த தங்கம் ரூ.16,320 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.130,560 ஆகவும் குறைந்துள்ளது. 
 
மார்ச் 3-ஆம் தேதி ஒரு கிராம் சுத்தத் தங்கம் ரூ.16,871 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் விலை கணிசமாகக் குறைந்து முதலீட்டாளர்களுக்கு சற்று நிம்மதியைத் தந்துள்ளதை அட்டவணை காட்டுகிறது.
 
அதேபோல், ஆபரண தங்கமாக பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,960 க்கும், 8 கிராம் ரூ.119,680 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 
 
ஒரு கிராம் வெள்ளி ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000 ஆகவும் குறைந்துள்ளது. கடந்த மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.5,000 வரை சரிந்துள்ளது. 
 
சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலர் மதிப்பு உயர்வு மற்றும் பொருளாதார சூழல்களே இந்த தொடர் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றன.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுக எம்.எல்.ஏ ஆகிறாரா ஓபிஎஸ் மகன்? 3 தொகுதிகளுக்கு விருப்பமனு தாக்கல்..!