1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:16 IST)

இன்று முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு. 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு..!

Practical
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தேர்வை சுமார் ஆறு லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.  
 
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் செய்முறை தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.  
 
செய்முறை தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆய்வுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வுத்துறை வழங்கி உள்ள வழிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எந்த விதமான குளறுபடியும் இன்றி செய்முறை தேர்வுகளை நடத்த முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ஒரு சுற்றுக்கு அதிகபட்சமாக 25 முதல் 30 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் செய்முறை தேர்வு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்க நேரிடும் என்றும் எனவே கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Siva