1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:03 IST)

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்..! ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் பாய்ந்தது..!!

satelite
சீர்காழியில் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய சிறிய வகை செயற்கைக்கோள் ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி சென்னை கோலா சரஸ்வதி பள்ளியில் பயிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 50 பேர்,  ஒன்றிணைந்து பயிற்சி பட்டறை மூலம் இரண்டு கிலோ எடை கொண்ட சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்கினர். பள்ளி வளாகத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து துறை ஆகியவற்றின் மூலம் அனுமதி பெற்று விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
பள்ளி வளாகத்தில் ஹீலியம் பலூன் மூலம் இந்த சிறிய வகை செயற்கைக்கோள் பாராசூட்டில் கட்டி பலூன் மூலம் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

 
இந்த செயற்கைக்கோள் சுமார் மூன்று முதல் 8 மணி நேரம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு தட்பவெட்ப, வாயு அழுத்தம், காற்றின் மாறுபாடு, வளிமண்டல மாறுபாடு போன்ற தரவுகளை பதிவு செய்யும். இவற்றின் மூலம் பள்ளியில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இவை பெரும் உதவியாக இருக்கும் என இந்த செயற்கைக்கோள் உருவாக்க வழி காட்டுதலாக செயல்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.
 
செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சியில் சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.