ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (22:03 IST)

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..! - 96 படம் போல 39 ஆண்டுகள் கழித்து ஸ்கூல் ரீயூனியன்!

School reunion
96 படத்தில் வருவது போல 39 ஆண்டுகள் கழித்து ஒன்றாக படித்த நண்பர்கள் ஒன்றாக சந்தித்த சம்பவம் வால்பாறையில் நடந்துள்ளது.



விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் பல ஆண்டுகள் கழித்து ஸ்கூல் ரீயூனியனில் சந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் அதுநாள் வரை தங்கள் வாழ்வில் சந்தித்த விஷயங்களையும், பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொள்வர். தற்போது அதுபோல பல பகுதிகளிலும் பல ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கூல் ரீயூனியனில் சந்தித்துக் கொள்வது அதிகரித்துள்ளது.

அப்படியாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்காவில் உள்ள முடிஸ் பகுதியில் உள்ள தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் அரசு உதவி பெரும் மத்திய நடுநிலைப்பள்ளியில் 1984ம் ஆண்டில் படித்த நண்பர்கள் 39 ஆண்டுகள் கழித்து ஸ்கூல் ரீயூனியனில் சந்தித்துள்ளனர்.

School reunion


தற்போது இவர்கள் கேரளா, டெல்லி, சென்னை என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் நிலையில் கோவையில் வசிக்கும் தர்மலிங்கம் பீலிக்ஸ் மற்றும் நீலகிரியை சேர்ந்த முத்துக்குமார் இருவரும் சேர்ந்து இதற்காக வாட்ஸப் குரூப் தொடங்கி நண்பர்களை தேடி பிடித்து ரீயூனியன் சந்திப்பை நடத்தியுள்ளனர். தாங்கள் படித்த வகுப்பறை, விளையாடிய மைதானம், மக்கள் என அனைத்தையும் சுற்றிப்பார்த்த அவர்கள், பள்ளிக்கு தேவையான வசதிகளையும் செய்த தரப்போவதாக கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K