1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Bomb threat to schools in Chennai

சென்னையில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb threat to schools in Chennai
சென்னையில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில்  அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ஆர்.ஏ.புரத்தில் இன்று 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீஸார் மோப்ப  நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று போலீஸார் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
உரிமையாளரை காப்பாற்ற 48 மணி நேரம் குரைத்து உதவி கோரிய நாய்!