ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:35 IST)

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் முகவரி வெளியானது!

Bomb threat to schools in Chennai
சென்னையில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள  நிலையில், அந்த இமெயில் முகவரி வெளியாகியுள்ளது.

சென்னையில்  இன்று 5 தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, போலீஸார் மோப்ப  நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்று போலீஸார் தரப்பில் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து சென்னை கமிஷனருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். தற்போதைய நிலைமை, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை  குறித்து கேட்டறிந்தார்.

இந்த நிலையில்,  பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்த இமெயில் முகவரி வெளியாகியுள்ளது.

சென்னையில் அண்ணா நகர், முகப்பேர், ஓடேரி, கோபாலபுரம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே விரைவில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீஸார் கைது செய்வார்கள் என கூறப்படுகிறது.