தொடர்புடைய செய்திகள்
- பாரந்தூரை தேர்வு செய்தது தமிழக அரசு தான் – மத்திய அரசு தடாலடி!
- நியூசிலாந்தில் தொடர் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
- பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது யார்? மத்திய அமைச்சர் பேட்டி
- மத்திய அரசில் 11,409 காலி பணியிடங்கள்! தமிழில் தேர்வு! – விண்ணப்பிப்பது எப்படி?
- மத்திய அரசின் எஸ்.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு!
10, 11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தேதிகள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை திட்டம்
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு முன் நடைபெறும் செய்முறை தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
10, 11, 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த செய்முறை தேர்வுகளை முன்னரே நடத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டமிடப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2022-23 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியானது என்பதும் அதன் படி மார்ச் 13 முதல் ஏப்ரல் மூன்று வரை 12-ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்ரல் 6 முதல் 20 வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச் 14 முதல் 5 வரை 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் உள்ளது.
இந்த நிலையில் 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு தேர்வை மார்ச் 1 முதல் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
