1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 24 பிப்ரவரி 2021 (11:42 IST)

வனத்துறை காசுக்கு அடிமையாகி விட்டது - வீடியோ வெளியிட்டு ஊழியர் தற்கொலை!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளர் ஆக பணியாற்றி வந்தார். 

 
இந்நிலையில் அந்தியூர் அருகே வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்தது கொண்டார். பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வனத்துறையில் நேர்மையாக வேலை செய்பவர்கள் யாரும் மதிப்பதில்லை. இங்குள்ளவர்களுக்கு காசு தான். 
 
ஓடி,ஓடி உண்மையாக உழைத்தால் கூட ஒன்னும் செய்ய முடியாது. வனத்துறையில் நிறைய சாதிக்க நினைத்தேன். ஆனால் ஒன்றும் முடியவில்லை வனச்சரகர் கேட்டு கேட்டு செய்ய வேண்டியுள்ளது. இதனை மாவட்ட வன அதிகாரி மிகவும் கேவலமாக பார்க்கிறார். இது எனக்கு தேவையில்லை. வனத்துறை காசுக்கு அடிமையாகி விட்டது என்று பிரபாகரன் பேசிய உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.