காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவை கைப்பற்றினால் அவருடைய சொத்துக்கள் சூறையாடப்படும் என பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதை மத்திய கிழக்கின் சுற்றுலாத்தலமாக மாற்ற விரும்புவதாகவும், ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இதற்கு காசா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், "காசா விற்பனைக்கு அல்ல" என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காசாவை கைப்பற்ற நினைத்தால், ட்ரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும் என பலஸ்தீனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு எச்சரிக்கை விடுத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ட்ரம்ப் அதற்கெல்லாம் அஞ்சாமல், "காசாவை கைப்பற்றுவோம், அதனை சுற்றுலா தளமாக மாற்றுவோம்" என்று உறுதியாக கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva