ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (12:54 IST)

அனைத்து நூலகங்களையும் திறக்க வேண்டியது அவசியம்! – மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காரணமாக மூடப்பட்ட நூலகங்களை திறக்க மதுரை கிளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டாலும் அமர்ந்து படிக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, புத்தகங்களை எடுத்து செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களையும் திறக்கவும், அமர்ந்து படிக்கும் வசதிக்கு அனுமதி அளிக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி பெற கிராமப்புற நூலகங்கள் முக்கியமானவையாக உள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.