ராமர் கோயில் கட்ட மதுரையில் ரத யாத்திரை அனுமதி… நீதிமன்றம் உத்தரவு!
ராமர் கோயில் கட்ட நிதி வசூல் செய்வதற்காக மதுரையில் ரத யாத்திரை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகராம் முற்று பெற்று சம்மந்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக இந்திய குடியரசுத்தலைவர் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இது போல பாஜக பிரமுகர்கள் நிதியுதவி அளித்தும் நிதியுதவி அளிக்க சொல்லியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் நன்கொடை வசூல் செய்வதற்காக 100 வார்டுகளில் ரத யாத்திரைக் கோரி அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை கொரோனாவைக் காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இதையடுத்து செல்வக்குமார் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை ஏற்ற நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளது.