ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (14:04 IST)

ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை, போலீஸ் விசாரணை.

 
மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
இந்நிலையில் இன்று காலை பணிக்கு வந்த சக தூய்மைப் பணியாளர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வேல்முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக  இருந்தார். சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.