1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:41 IST)

அயோத்தியில் ராமர் கோவில், மதுரையில் ரத யாத்திரை! – நீதிமன்றம் அனுமதி!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பல பகுதிகளிலிருந்து பலர் அதற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்துமத அமைப்புகள் சிலவும் மக்களிடம் நன்கொடை வசூல் செய்து ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்தவும், அதேசமயம் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் கூட்டம் கூடுதலை தவிர்த்தல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியுள்ளது.