ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 மார்ச் 2025 (17:37 IST)

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Kim Jong Un

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத கப்பலை செய்து முடித்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வடகொரியா நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வரும் நிலையில், அந்நாட்டின் சட்டத் திட்டங்களே அங்கு நடப்பவற்றை பிற நாடுகள் அறியாமுடியாத வகையில் இருந்து வருகிறது. மேலும் அண்டை நாடான தென்கொரியாவுடனும் தொடர்ந்து மோதலில் இருந்து வரும் வடகொரியா, அமெரிக்காவையும் சீண்டி வருகிறது.

 

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், கடலில் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருவதால், வடகொரியா மீது சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அதை மீறியும் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத தயாரிப்பை செய்து வருகிறது.

 

இந்நிலையில்தான் தற்போது வெற்றிகரமாக கட்டி முடித்துள்ள அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலின் முன்னர் நின்று அதிபர் கிம் ஜாங் உன் போஸ் கொடுக்கும் போட்டோவை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 7 ஆயிரம் டன் எடைக் கொண்டது என்றும், சுமார் 10 ஏவுகணைகளைம் சுமந்து செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது எனவும் கூறப்படுகிறது.

 

தென்கொரிய தீபகற்ப கடல் பகுதியின் ஆதிக்கம் தொடர்பாக வடகொரியா, தென்கொரியா இடையே தொடர் மோதல் நிலவி வரும் நிலையில் இந்த நீர்மூழ்கி கப்பலால் வடகொரியாவின் கடல் ஆதிக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K