1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Postal vote application 2 lakhs people interested

தபாலில் வாக்களிக்க 2.44 லட்சம் பேர் விண்ணப்பம்! – தேர்தல் ஆணையம் தகவல்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலில் தபால் ஓட்டு போட 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு நேரடியாக வர முடியாதோர் முன்னதாக தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை 2,08,963 பேர் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். இவர்களில் 49,114 பேர் மாற்று திறனாளிகள், 1.59 லட்சம் பேர் 60 வயதிற்கும் அதிகமான முதியவர்கள், 35 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் கொரோனா! – அதிர்ச்சியில் தஞ்சாவூர்!