செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (11:25 IST)

ஊர்ந்து செல்ல நான் பல்லியா? பாம்பா? – எடப்பாடியார் ஆவேசம்!

தான் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்கியதாக மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் பேசிய அவர் “ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா? நடந்து சென்றுதான் முதல்வர் ஆனேன். விவசாயிகள் கஷ்டத்தை உணர்ந்தவன் நான். வெயில் மழை பாராமல் உழைக்கும் விவசாயிகளின் கஷ்டம் ஸ்டாலினுக்க்கு தெரியாது. எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்கிறார். நான் குதித்தால் உங்களுக்கு என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.