தொடர்புடைய செய்திகள்
- 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும்… தமிழகத்தில் எதிர்க்கட்சியே இருக்காது – ஸ்டாலின் உறுதி!
- ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு; பிரச்சாரத்தை ரத்து செய்த கமல்
- வேட்பாளர்கள் அறிமுகம்… இன்று முதல் மு க ஸ்டாலின் பிரச்சாரம்!
- முக ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்: பிரச்சாரத்தையும் தொடங்க திட்டம்!
- திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
கணவர் ஆட்டோ ஓட்ட பின்னால் அமர்ந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்!
தமிழகத்தில் தேர்தல் நாள் நெருங்கியுள்ளதை அடுத்து வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் என்பது இப்போதெல்லாம் பணத்தைக் கொட்டி வாக்குகளை வாங்குவது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. கட்சி வித்தியாசம் இல்லாமல் எல்லா வேட்பாளர்களுமே பணத்தை தண்ணீராய் இரைத்து தேர்தல் செலவுகளை செய்து வருகின்றனர். ஆனாலும் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கதான் செய்கின்றன.
அந்த வகையில் திருப்பரங்குன்றம் தொகுதியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட பொன்னுத்தாயி தொகுதியில் ஆட்டோவில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஆட்டோவை அவரின் கணவர் கருணாநிதி ஓட்டிச்சென்று வருகிறார். மிகவும் எளிமையான முறையில் வாக்கு சேகரிக்கும் அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
