வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (15:27 IST)

ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு; பிரச்சாரத்தை ரத்து செய்த கமல்

நடிகர் கமல்ஹாசன் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் முதன் முதலாக வரும் சட்டசபைத் தேர்தலில் களமிறங்குகிறார். அவர் கோவை தெற்குத் தொகுதியில் தமது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

எனவே நேற்று  இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் செய்தார்.

கமல்ஹாசன் ஒவ்வொரு பகுதிக்கும் விரைந்து செல்வதற்காக தனி விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் சென்று வருகிறார்.

கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடவுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனு தாக்கலின் போது தனது சொத்து மதிப்பு, ரூ.176.93 கோடி ரூபாய்  இருப்பதாக நடிகர் கமல்ஹாசன், குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் கூறியதாவது:  66 வயதாகிவிட்ட எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்;  எம்ஜிஆர் கூட 3வது அணியாக வந்து வெற்றி பெற்றவர்தான் எனத் தெரிவித்தார்.

மேலும், இன்று குமாரபாளையத்தில் ஹெலிகாப்டர் இறங்க மாவட்ட நிர்வாக அனுமதி மறுத்தது. எனவே, நடிகர் கமல்ஹாசன் ஈரோடு, நாமக்கல் மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.