வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (10:36 IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு.. நேரில் ஆஜராகிறார் பொன்முடி..!

Ponmudi
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என சமீபத்தில் பொன்முடி வழக்கு குறித்து தீர்ப்பு வெளியான நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி மூலம் ஆதரவாகலாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் வழியாக உள்ளன.
 
அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மீதான வழக்கில் இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி இன்று நேரில் ஆஜர் ஆகிறார். நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவர் தனது மனைவியுடன் நேரில் ஆஜராகவுள்ளதாக கூறப்படுகிறது.
 
 இன்னும் சில நிமிடங்களில் பொன்முடி வழக்கில் அவருக்கு தண்டனை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்பதால் திமுக தொண்டர்கள்  பரபரப்பில் உள்ளனர்.  இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை என்ற தீர்ப்பு வந்தால் பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிபோகும் என்றும் அது மட்டுமின்றி அவர் அமைச்சராக தொடர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran