வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (12:51 IST)

அதிபர் தேர்தலில் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர்! - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது


 
2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.  தேர்தல் தோல்வியை அவர் ஏற்க மறுத்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்  அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்புக்கு தகுதியில்லை என்று கொலராடோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்பின் பெயர் இடம் பெறக் கூடாது என்றும் அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை டிரம்ப் எதிர்த்த நிலையில், அவர் மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ஆம் தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.