ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 20 டிசம்பர் 2023 (16:56 IST)

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு.. அதிமுக வாய் திறக்காதது ஏன்?

ADMK
அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு  வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியான நிலையில் அவர் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை காலை 10:30 மணிக்கு அவரது தண்டனை குறித்த விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைத்தால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து பாஜக உட்பட ஒரு சில கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதிமுகவை சேர்ந்த யாருமே விமர்சனம் செய்யாமல் அமைதியாக உள்ளனர்.  
 
இந்த நிலையில் இது குறித்து அதிமுக வட்டாரத்தில் கூறிய போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல சொத்து குவிப்பு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளின் தீர்ப்பும் அடுத்தடுத்து வரும்போது இதேபோல் விமர்சனம் செய்யப்படும் என்பதால் பொன்முடி வழக்கு குறித்து அதிமுகவினர் எந்தவித விமர்சனம் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva