1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pon.Radhakrishnan talk about kaala movie

காவிரிக்காக அல்ல ; காலாவிற்காக ஸ்டாலினை பேச சொல்லும் பொன்னார்

Radhakrishnan
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட திமுக செயல்தலைவர் மு.கஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என கன்னட திரை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, இப்படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழை வாழ வைப்பதாக கூறி தமிழனை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. எனவே, கர்நாடக முதல்வரிடம் பேசி குறைந்தபட்சம் காலா திரைப்படத்தை அங்கு வெளியிட ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தமிழனாக இது என் கோரிக்கை. முடிந்தால் இதையாவது திமுக செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
‘தமிழ்ப்படம் 2.0’வுக்காக கஸ்தூரி ஆடிய அயிட்டம் சாங்