செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (16:20 IST)

‘தமிழ்ப்படம் 2.0’வுக்காக கஸ்தூரி ஆடிய அயிட்டம் சாங்

‘தமிழ்ப்படம் 2.0’வுக்காக கஸ்தூரி ஒரு அயிட்டம் பாட்டுக்கு ஆடியுள்ளார்.
 
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘2.0’. சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், மனோபாலா, சந்தான பாரதி, ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அஜித்தின் ‘விவேகம்’, ‘மங்காத்தா’, விஜய்யின் ‘கத்தி’, ‘துப்பாக்கி’, விஜய் சேதுபதி - மாதவனின் ‘விக்ரம் வேதா’, விஷாலின் ‘துப்பறிவாளன்’ ஆகிய படங்களைக் கலாய்த்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் கலாய்த்தும் காட்சி இருந்தது. இந்தப் படத்தில், ஒரு அயிட்டம் பாட்டுக்கு ஆடியுள்ளார் கஸ்தூரி. மழையில் நனைந்துகொண்டே அவர் ஆடுவது போன்ற காட்சி டீஸரில் இடம்பெற்றுள்ளது. ‘வா வா காமா, இங்கு யார்தான் ராமா?’ என்று அந்தப் பாடல் தொடங்குகிறது.