தொடர்புடைய செய்திகள்
- முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி! – தலைவர்கள் இரங்கல்!
- ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா; உச்சத்தை தொட்ட தினசரி பாதிப்புகள்!
- கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது கடினம்! – விஞ்ஞான ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!
- காமெடி நடிகர் பாண்டு கொரோனாவுக்கு பலி!
- கொரோனாவால் இறந்த தந்தை; தீயில் பாய்ந்த மகள்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!
பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!
தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாக்குமரி எம்.பி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்திற்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டிருந்தார். தற்போது கொரோனா உறுதியான நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
அடுத்த கட்டுரையில்
