திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (10:09 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனாவுக்கு பலி! – தலைவர்கள் இரங்கல்!

இந்தியா முழுவதும் கொரோனா பலிகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் அஜித் சிங். இவர் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியையும் தொடங்கி நடத்தி வந்தவர். மேலும் முன்னாள் பாரத பிரதமாரக இருந்த சௌத்ரி சரண் சிங்கின் மகன்தான் இந்த அஜித் சிங்.

கடந்த சில நாட்கள் முன்னதாக கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இழப்பிற்கு கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.