தொடர்புடைய செய்திகள்
- 3 மாதங்களில் அதிமுக-அமமுக இணைப்பு: சசிகலாவின் மெகா பிளான்
- நாங்குநேரியில் ஸ்டாலின்– 4 நாட்கள் பிரச்சாரம் !
- இடைத்தேர்தல் – அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக அறிக்கை !
- சென்னை வரும் மோடி! – கருப்பு கொடி காட்டுமா எதிர்க்கட்சிகள்?
- கீழடியை பார்த்தபோது சந்திரயானை போல் பறந்தேன்.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம் !
இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிப்பது தொடர்பாக பாஜக இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி ,விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் களமிறங்குகின்றன. அதேப்போல அதிமுக கூட்டணியில் தமிழகத்தில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
நாங்குநேரி தொகுதியை தங்களுக்காக பாஜக கேட்டு அதை அதிமுக கொடுக்க மறுத்ததால் பாஜக- அதிமுக கூட்டணியில் விரிசல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறு நாங்கள் கேட்கவில்லை என பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை பாஜகவுக்கு ஆதரவும் அளிக்கவில்லை.
இது சம்மந்தமாகக் கேள்வி எழுப்பியபோது அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
